வடக்கு பகவதிபுரம் தந்த பாடம் – தமிழ்செல்வன்


From

http://vsrc.in/index.php/articles/2013-06-30-13-41-11/item/36-2013-07-06-10-11-05.html

கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், இரண்டு ஹிந்து கோவில்களுக்கு அருகில், வேண்டுமென்றே ஒரு சர்ச்சை கட்ட நினைத்து, அதுவும் சட்டத்திற்கு விரோதமாக, அதை சாதித்தும் காட்டிய ஒரு கும்பலை எதிர்த்து வெற்றி பெறுவது என்பது சாதாரணமான காரியம் அல்ல. அதை சாதித்துக் காட்டியுள்ளனர் வடக்கு பகவதிபுரம் ஹிந்துக்கள். அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் நாகர்கோவில் வழக்கறிஞர் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள்.

வடக்கு பகவதிபுரம் ஹிந்துக்கள் 25 ஆண்டுகள் தொடர்ந்துபோராடி, ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் செயல்படும் ஒரு இடத்தில், அன்னிய சக்திகள் எவ்வளவு அரசியல் பலமும் பணபலமும் கொண்டிருந்தாலும், தோற்றுத்தான் போகும் என்று செயலில் காட்டிவிட்டனர்.

மொத்த பரப்பளவு: 1672 சதுர கிலோ மீட்டர்; மொத்த ஜனத்தொகை: 16, 76,034; ஹிந்துக்கள்: 8,59,307; கிறிஸ்தவர்கள்: 7,45,406; இது 2001-ல் எடுக்கப்பட்ட எண்ணிக்கை. தற்போது கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் 6 லக்ஷமும் பிராடஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் 2 லக்ஷமும் மற்ற கிறிஸ்தவ பிரிவினர் கொஞ்சமும் இருப்பதாகத் தெரிகின்றது. கத்தோலிக்கப் பிரிவில் மட்டும் 200 வட்டாரங்களும் 200 பங்குகளும் 10,000 அன்பியங்களும் இயங்குகின்றன. சி.எஸ்.ஐ (C.S.I) சர்ச்சுகள் மட்டுமே 1500க்கும் அதிகமாக இருக்கின்றன. அதாவது மொத்த பரப்பளவே 1672 சதுர கிலோமீட்டர்தான். இந்தச் சிறிய நிலப்பரப்பில்தான் எத்தனை சர்ச்சுகள்!

ஆம். கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றித்தான் சொல்கிறேன். ஹிந்துக்கள் இங்கே சிறுபான்மையினராக ஆகிவிட்டார்கள். இருக்கின்ற சர்ச்சுகள் போதாது என்பது போல் பெந்தகோஸ்தே சர்ச்சுகள் வேறு காளான்களென முளைக்கின்றன. அவை போதாதென்று சால்வேஷன் ஆர்மி என்கிற அமைப்பு வேறு. இன்னும் கன்னாபின்னாவென்று ஏகப்பட்ட அமைப்புகள், என்.ஜி.ஓ.க்கள். இவர்களுக்கு நிலத்தை வாங்கிப்போட்டு சர்ச்சு கட்டுவதும் மதமாற்றத்தில் ஈடுபடுவதும் குடிசைத்தொழில்.

இப்பேர்பட்ட கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு உள்ள மாவட்டத்தில், இரண்டு ஹிந்து கோவில்களுக்கு அருகில், வேண்டுமென்றே ஒரு சர்ச்சை கட்ட நினைத்து, அதுவும் சட்டத்திற்கு விரோதமாக, அதை சாதித்தும் காட்டிய ஒரு கும்பலை எதிர்த்து வெற்றி பெறுவது என்பது சாதாரணமான காரியம் அல்ல. அதை சாதித்துக் காட்டியுள்ளனர் வடக்கு பகவதிபுரம் ஹிந்துக்கள். அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் நாகர்கோவில் வழக்கறிஞர் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள்.

வடக்கு பகவதிபுரம் ஹிந்துக்களின் போராட்டம் இன்று நேற்று நடந்ததல்ல. 25 ஆண்டுகள் தொடர்ந்து போராடியிருக்கிறார்கள். கிடைத்த வெற்றியும் நாகர்கோவில் நீதிமன்ற அளவில்தான். கிறிஸ்தவர் பக்கம் உயர்நீதிமன்றத்திற்கும், அதில் தோற்றால் உச்சநீதிமன்றத்திற்கும் கண்டிப்பாக வழக்கை எடுத்துச் செல்வர். அதற்கான அரசியல் பலமும் பணபலமும் அவர்களிடம் ஏராளமாக இருக்கின்றது.

வடக்கு பகவதிபுரம் வழக்கு
வடக்கு பகவதிபுரம் கிராமத்தில் மொத்தம் 300 பேர் கொண்ட 70 ஹிந்து குடும்பங்களும், 50 பேர் கொண்ட 21 கிறிஸ்தவ குடும்பங்களும் இருக்கின்றன. கிராமத்தில் ஒரு பிள்ளையார் கோவிலும் ஒரு முத்தாரம்மன் கோவிலும் உள்ளன. ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் ஒரு சர்ச்சும் உள்ளது. இது போதாதென்று இந்த இரு கோவில்களுக்கும் அருகே ஒரு சர்ச்சைக் கட்ட முயன்று, தங்களுடைய அரசியல் பலம், பணபலம் அனைத்தையும் பயன்படுத்தி வெற்றியும் அடைந்தனர் கிறிஸ்தவர்கள்.

மண்டைக்காடு கலவரத்திற்குப் பிறகு அமைக்கப்பட்ட நீதிபதி வேணுகோபால் விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் உள்ள பரிந்துரைப்படி, ஒரு வழிபாட்டு தலத்திலிருந்து 1 கிலோமீட்டருக்குள் மற்றொரு மதத்தினரின் வழிபாட்டுத் தலம் அமைக்கப்படக் கூடாது. மேலும், ஒரு வழிபாட்டுத்தலம் அமைக்க மாவட்ட ஆட்சியரின் அனுமதியும் முன்பே பெறவேண்டும். ஆனால் இந்த இரண்டு விதிகளையும் மீறி, வெறும் பஞ்சாயத்தாரின் அனுமதியை மட்டும் பெற்றுக்கொண்டு கிறிஸ்தவர்கள் இரண்டு கோவில்களுக்கும் அருகே, சுமார் 214 மீட்டர் தொலைவில், சர்ச்சைக் கட்டி முடித்தனர்.

இதை எதிர்த்து 25 ஆண்டுகள் தொடர்ந்து போராடிய ஹிந்துக்களின் நியாயமான வழக்கைப் பரிசீலித்து, நாகர்கோவில் நீதிமன்றம் (Sub-Court) சர்ச்சு சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது என்றும் அதை நீக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

கிறிஸ்தவ ஆக்கிரமிப்பின் வரலாறு
வடக்கு பகவதிபுரம் பிரச்சனையை ஒரு தனிப்பட்ட வழக்காக மட்டும் பார்க்கக்கூடாது. அதன் பின்னணியில் இருக்கும் கிறிஸ்தவ சர்ச்சின் நோக்கங்களையும், அந்நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான அவர்களுடைய செயல்பாடுகளையும் ஆராய்ந்து பார்த்தால், கன்னியாகுமரியில் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பின் வரலாறு நம் முகத்தில் அறையும்.

1960-களில் இந்தியப் பெருங்கடலில் கன்யாகுமரி கடற்கரையருகே சுவாமி விவேகானந்தர் தவமிருந்த பாறையின் மீது அவருக்கு ஒரு நினைவு மண்டபம் எழுப்ப ஹிந்துக்கள் திட்டமிட்டு செயல்படத் தொடங்கினர். அப்போது (1963) அதைப் பொறுக்கமாட்டாத சர்ச்சு நிறுவனம் கடலோர கிறிஸ்தவ மீனவர்களைத் தூண்டிவிட்டு அப்பாறையில் ஒரு சிலுவையை நட்டுவைத்து ஹிந்துக்களின் திட்டத்தை முறியடிக்க நினைத்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். தலைவர் உயர்திரு ஏக்நாத் ரானடே அவர்களின் தீவிர முயற்சியால் சுவாமி விவேகான்ந்தருக்கு நினைவு மண்டபம் வெற்றிகரமாக எழும்பியது.

ஆயினும் கிறிஸ்தவர்கள் பிரச்சனைகள் கொடுத்துக்கொண்டே இருந்தனர். சுவாமிஜியின் நினைவு மண்டபத்திற்குச் செல்ல விவேகனந்தா கேந்திரா நடத்தி வந்த படகுச் சேவையை கிறிஸ்தவ மீனவர் 1975-ல் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, தமிழக அரசு படகுச் சேவையை தான் கையகப்படுத்திக்கொண்டது.

திராவிட முன்னேற்றக்கழக அரசு ஹிந்துக்களுக்கு ஆதரவாக இல்லை என்பதைப் புரிந்துகொண்ட கிறிஸ்தவ நிறுவனங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்கள் ஆக்கிரமிப்பு வேலைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். ஹிந்துக் கோவில்களைத் தாக்குவதும், ஹிந்து திருவிழாக்களை நடத்தவிடாமல் செய்வதும் தொடர்கதையாகிப் போயின.

மண்டைக்காடு கலவரம்
பிப்ரவரி 28 1982-ல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலின் மாசி திருவிழா விழாவின்போது அதை நடத்தவிடாமல் தடுத்தனர் கிறிஸ்தவர்கள். பக்கத்தில் உள்ள சகாய மாதா சர்ச்சில் கூம்பு ஒலிபெருக்கிகளில் கிறிஸ்தவ பாடல்களை பெரிதாக அலற வைத்தனர். கோவில் திருவிழாக்களுக்கு வந்திருந்த ஹிந்துப் பெண்களின் மீது பாலியல் பலாத்காரம் செய்தனர். அதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மதத் துவேஷம் தீயெனப் பற்றிக்கொண்டது. மண்டைக்காடு கலவரம் வெடித்து இரண்டு இடங்களில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு நீதியரசர் பி.வேணுகோபால் அவர்கள் தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை நியமித்தது. ஆணையமும் தன்னுடைய அறிக்கையை அரசுக்கு சமிர்ப்பிக்க, அரசு செப்டம்பர் 21, 1985 அன்று அதை ஏற்றுக்கொண்டது. பின்னர், வேணுகோபால் ஆணையத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு 9.4.1986 அன்று அரசாணை (எண்: 916) வெளியிட்டது. அந்த ஆணையத்தின் பரிந்துரைகளில் மிகவும் முக்கியமான க்ஷரத்து என்னவென்றால், கனியாகுமரி மாவட்டத்தில் உடனடியாக மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதுதான். ஆனால் தொடர்ந்து ஆட்சியில் இருந்த திராவிடக் கட்சிகள் வேணுகோபால் ஆணையத்தின் பரிதுரைகளையும், அரசாணையையும் உடைப்பில் போட்டுவிட்டன.

அராஜக ஆக்கிரமிப்புகள்
திராவிட அரசுகள் கண்களை மூடிக்கொண்டதால் கிறிஸ்தவ நிறுவன்ங்களின் அராஜகச் செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

1986-ல் சுங்கங்கடை பொன்மலை சாஸ்தா (Golden Mount of Lord Aiyappa) எனும் தலத்தை முழுமையாகக் கையகப்படுத்திய கத்தோலிக்க பாதிரி, அந்தத் தலத்தை புனித சேவியர் மலையாக (Mount St.Xavier) மாற்றினார்.
காளிமலையின் (Mt.Kaali) ஒரு பக்கத்தை ஆக்கிரமித்து அதில் சிலுவையை நட்டு, குருசுமலை (Mt.Cross) என்று பெயர் மாற்றினர்.
திருவிதாங்கோடு பெரிய நாயகி அம்மன் கோவில் “பெரியநாயகி கன்னி மேரி சர்ச்” என்று மாற்றப்பட்டது.
எட்டமடை அங்காளீஸ்வரி கோவிலின் சுறுச்சுவரை இடித்துத் தரைமட்டமாக்கி அந்த நிலப்பரப்பை எட்டமடை ரோமன் கத்தோலிக்க சர்ச்சு ஆக்கிரமித்தது.
மாவட்டம் முழுவதையும் ஆக்கிரமித்த கிறிஸ்தவ நிறுவனங்கள், ஆக்கிரமிப்பின் உச்சக்கட்டமாக, ஒரு கட்டத்தில், ஹிந்துக்களின் கண்கண்ட தெய்வமான பார்வதி தேவி அவதரித்த கன்னியாகுமரியை “கன்னிமேரி” மாவட்டம் என்று பெயர் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். ஆயினும் ஹிந்துக்கள் பொங்கிஎழுந்ததையடுத்து அந்தக் கோரிக்கை தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு பகவதிபுர வழக்கின் வரலாறு
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த கிறிஸ்தவ ஆக்கிரமிப்புகளின் வரலாற்றைப் பார்த்தோம். இப்போது வடக்கு பகவதிபுர பிரச்சனையில் ஆரம்பித்திலிருந்து நடந்தவற்றை வரிசைக் கிரமத்தில் பார்த்தால், கிறிஸ்தவர்களின் பணபலமும், அரசியல் பலமும் நமக்கு நன்கு விளங்கும்.

1988 – வடக்கு பகவதிபுரம் கிராமத்தில் பிள்ளையார் கோவிலுக்கும் முத்தாரம்மன் கோவிலுக்கும் அருகே 13 செண்ட் நிலத்தை சி.எஸ்.ஐ. டையோஸீஸ் (C.S.I. Diocese) வாங்கியது.

05.01.1989 – அந்த 13 செண்ட் நிலத்தில் சர்ச்சு கட்ட வடக்கு பகவதிபுரம் பஞ்சாயத்து அனுமதி அளித்தது. உடனடியாக ஹிந்துக்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். சர்ச்சு கட்டுவதை நிறுத்துமாறு பஞ்சாயத்தாரிடம் கோரிக்கை வைத்தனர்.

27.04.1989 – சர்ச்சு கட்டுவதை நிறுத்தச் சொல்லி பஞ்சாயத்து ஆணையிட்டது.

6.05.1989 – ஹிந்துக்கள் சர்ச்சு கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

15.05.1989 – பஞ்சாயத்து மீண்டும் சர்ச்சு கட்ட அனுமதி அளித்தது.

இடையே ஹிந்துக்கள் தரப்பினர் கீழ் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தனர். நகர்கோவில் முன்ஸீஃப் கோர்ட்டில் நடத்தப்பட்ட பஞ்சாயத்து சட்டவிதி வழக்கின் (case No OS 543/1989) தீர்ப்பை சுட்டிக்காட்டி, ஒரு மதம் சம்பந்தப்பட்ட கட்டிடத்தைக் கட்ட பஞ்சாயத்து அனுமதி மட்டும் போதாது, மாவட்ட ஆட்சிமன்றத்தின் அனுமதியும் வேண்டும் என்று தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர் ஹிந்துக்கள்.

19.10.1989 – பிரச்சனைக்குரிய இடத்திற்கு அருகிலேயே மேலும் 2 செண்ட் நிலத்தை வாங்கிய சி.எஸ்.ஐ. சர்ச்சின் பிஷப், சர்ச்சைத் தொடர்ந்து கட்டுகிறார். நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில் அந்த பிஷப்பையும் குற்றம் சாட்டப்பட்டவராகச் சேர்த்துவிடுகின்றனர் ஹிந்து தரப்பினர்.

17.02.1990 – ஹிந்துக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மேலும் ஒரு புகார் மனுவை அளித்தனர்

மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி சர்ச்சு கட்டப்படுவதாக மற்றொரு வழக்கு (Case No OS 561/91) நாகர்கோவில் முன்ஸீஃப் கோர்ட்டில் பதிவு செய்யப்படுகிறது.

1991 – ஹிந்துக்களின் கார்த்திகை மாத பஜனை ஊர்வலத்தில் கிறிஸ்தவர்கள் கற்களை வீசி ஊர்வலத்தைக் கலைக்க முயன்றனர்.

1994 – அந்தக் கிராமத்தில் இருக்கும் பொன்னையா என்கிற அரசு ஊழியரை, அவர் ஹிந்துக்களுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பதற்காக, சதீஷ் குமார், குருபாதம் என்கிற இரண்டு கிறிஸ்தவர்கள் கடுமையாக தாக்கினர். பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டனர்.

20.03.1998 – நீதிமன்றம், சர்ச்சு சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது என்று கூறி அதை நீக்குமாறு ஆணையிட்டது.

1999 – சர்ச்சுக்கு எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை என்று ஆர்.டி.ஓ (R.D.O) சான்று பகர்ந்து பரிந்துரை செய்கிறார். ஹிந்துக்கள் அந்த பரிந்துரைக்கு கடுமையாக ஆட்சேபமும் எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர்.

11.10.1999 – ஒரு அமைதிக் கூட்டத்தை ஏற்பாடு செய்த ஆர்.டி.ஓ, சர்ச்சு கட்டுவதை எதிர்க்கக்கூடாது என்றும் அப்படி மீறி எதிர்த்தால் ஹிந்துக்கள் மீது பொய் வழக்கு போட்டுவிடுவேன் என்றும் மிரட்டினார். மிரட்டலுக்கு பயப்படாமல் ஹிந்துக்கள் மேலும் தங்கள் எதிர்ப்பை காட்டினர்.

11.04.2000 – ஆர்.டி.ஓ மிண்டும் ஒரு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆர்.டி.ஓ. பாரபட்சமாக நடந்துகொள்வதால் அபடி ஒரு பேச்சுவார்த்தைக் கூட்டம் தேவையில்லை என்றும், நீதிமன்றமும் சர்ச்சு சட்ட விரோதமாகக் கட்டப்பட்டது என்று கூறிவிட்டதாலும், ஹிந்துக்கள் அவர் அழைப்பை மறுத்துவிடுகின்றனர்.

16.05.2000 – ஆர்.டி.ஓ மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைக்கின்றார். ஹிந்துக்கள் மீண்டும் மறுத்துவிடுகின்றனர்.

02.06.2000 – சர்ச்சுக்கு எதிர்ப்பு இல்லை என்றும், சட்ட ஒழுங்கு பிரச்சனை வர வாய்ப்பில்லை என்றும் கூறி, நீதிமன்ற ஆணையை மீறி, சர்ச்சு கட்ட அனுமதி வழங்குகிறார் மாவட்ட ஆட்சியர் ரமேஷ் சந்திர மீனா. மேலும் 1982-ல் அங்கே ஏற்கனவே ஒரு சர்ச்சு இருந்ததாகவும், அந்த விவரத்தை நீதிமன்றம் நிராகரித்துவிட்டதாகவும் ஒரு பொய்யை கூறுகிறார் மாவட்ட ஆட்சியர் ரமேஷ் சந்திர மீனா.

09.06.2000 – மாவட்ட ஆட்சியர் அளித்த ஆணையின் நகலை பஞ்சாயத்தாரிடம் ஹிந்து தரப்பினர் கேட்ட போது, பஞ்சாயத்து தர மறுத்துவிட்டது.

17.06.2000 – சர்ச்சு கட்ட அளித்த அனுமதி ஆணையை ரத்து செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு ஹிந்து தரப்பினர் நோட்டீஸ் அனுப்புகின்றனர். ஆனால் அதற்கு மாவட்ட ஆட்சியர் பதில் தரவில்லை.

2002 – நாகர்கோவில் முன்ஸீஃப் கோர்ட்டில் ஹிந்து தரப்பினர், மாவட்ட ஆட்சியர் அனுமதியை ரத்துசெய்து சர்ச்சை நீக்கவேண்டும் என்று, தமிழக அரசு, மாவட்ட ஆட்சியர் ரமேஷ் சந்திர மீனா (நேரில் வரச்சொல்லி), பஞ்சாயத்து, சி.எஸ்.ஐ. பிஷப் ஆகியோருக்கு எதிராக வழக்கு (OS 212/ 2002) தொடர்கின்றனர்.

2011 – நீண்ட நாட்கள் இழுத்தடிக்கப்பட்டு, நீதிக்கும் நியாயத்திற்கும் எதிராக எந்தவிதமான தர்க்க நியாயமும் இல்லாமல், வழக்கு தள்ளுபடி செய்யப்படுகின்றது. வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி முருகையா முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனிடம் ஜூனியராக இருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஹிந்து தரப்பினர் நாகர்கோவில் சப்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

17.06.2013 – 1982-ல் ஏற்கனவே ஒரு சர்ச்சு இருந்தது என்ற கிறிஸ்தவர் தரப்பின் உரிமை கோரிக்கையை நிராகரித்த சப் கோர்ட், கட்டப்பட்ட சர்ச்சு சட்டத்திற்கு விரோதமானது என்றும் அதை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.

எதிர்காலத்தில்…
கிறிஸ்தவத் தரப்பினர் உயர் நீதிமன்றத்திற்குக் கண்டிப்பாக மேல் முறையீடு செய்வர். அங்கு தோற்றாலும் உச்ச நீதிமன்றத்திற்கும் செல்வர். அவர்களிடம் அதற்கான அனைத்து வசதிகளும் உண்டு. ஆனால் வடக்கு பகவதிபுரம் கிராம மக்களுக்கு வெளியுதவி கண்டிப்பாகத் தேவை. திறமையான வழக்கறிஞர்களின் உதவியும் தேவை. நிதியுதவியும் தேவை. தமிழகத்தில் உள்ள ஹிந்து இயக்கத்தினர் இந்தக் கிராம மக்களுக்கு உதவக் கடமை பட்டுள்ளனர். தமிழகத்தில் எந்த மூலையில் ஹிந்துக்களுக்குப் பிரச்சனை வந்தாலும், அவர்களுக்கு ஆதரவாக்க் குரல் கொடுக்கவும், உதவி செய்யவும் சகோதர ஹிந்துக்களும் ஹிந்து இயக்கங்களும் இருக்கிறார்கள் என்று தெரிந்தாலே அன்னிய சக்திகள் தங்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு இருக்கும்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஹிந்துக்கள் தரப்பில் முன்னின்று வழக்கு தொடுத்தவர்கள், திரு.தங்கப்பன் நாடார், முத்தாரம்மன் கோவிலின் தலைவர் திரு.எஸ்.தங்கராஜ், திரு.எஸ்.செந்தில்வேல் மற்றும் திரு.ஜேக்கப் பாக்கியராஜ் ஆகியோர்.

இவர்களுக்கு வழிகாட்டியாகவும் வழக்குரைஞராகவும் 25 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியவர் திரு.ஆர்.பாலகிருஷ்ணன். இவர் ஏற்கனவே கன்யாகுமரி மாவட்டத்தில் வழுதலம்பள்ளம் என்னும் ஊரில் இதே போல் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட சர்ச்சை எதிர்த்த அந்த ஊர்மக்களின் சார்பாக, உச்ச நீதிமன்றம் வரை சென்று அதை இடிக்க வெற்றிகரமாக ஆணை வாங்கியவர். இவர் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர்-இயக்குனர் திரு.பால கௌதமனின் தந்தையார் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த நெடிய போராட்டத்தில் வடக்கு பகவதிபுரம் ஹிந்துக்களுக்கு கடைசி வரை ஆதரவாகத் தோளோடு தோள் நின்று போராட உதவியவர்கள் பாஜக தலைவர் திரு.பொன் ராதாகிருஷ்ணன் அவர்களும் ஹிந்து முன்ன்ணிஇயக்கத்தினரும்.

இவர்கள் அனைவரும் நிரூபித்த ஒரே விஷயம் “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதாகும். ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் செயல்படும் ஒரு இடத்தில், அன்னிய சக்திகள் எவ்வளவு அரசியல் பலமும் பணபலமும் கொண்டிருந்தாலும், தோற்றுத்தான் போகும் என்று செயலில் காட்டிவிட்டனர்.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வாழும் ஹிந்துக்கள் வடக்கு பகவதிபுரம் கிராம மக்களிடமிருந்து இந்த எளிய பாடத்தைக் கற்று உணர வேண்டும். தங்களுக்குள் ஜாதி வேற்றுமைகளைக் களைந்து, அனைவரும் ஹிந்துக்கள், நம்மிடையே ஏற்ற தாழ்வுகள் எதுவும் இல்லை என்பதை உணர்ந்து, ஒற்றுமையை நிலைநாட்டினால், அன்னிய சக்திகளும் அவர்களுக்கு துணைபோகும் அரசியல் கட்சியினரும் செயலிழந்து தோற்று ஓடுவார்கள் என்பது நிச்சயம்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!

References:
http://www.organiser.org/Encyc/2012/10/1/Aggressive-baptising-destroying-social-harmony.aspx?NB=&lang=4&m1=&m2=&p1=&p2=&p3=&p4=&PageType=N

Aggressive baptising destroying social harmony – L Victoria Gowri , Advocate

http://www.kanyakumari.tn.nic.in/

Advertisements

2 thoughts on “வடக்கு பகவதிபுரம் தந்த பாடம் – தமிழ்செல்வன்

  1. Bravo the residents of the area. Good luck and God bless Advocate Balakrishnan Sir. Wish an English translation of this write up is made and shared with all so that those who cant read Tamil could also know the contents, understand the issue and support the cause. It will be good if the same is made as a petition to the State Governor and TN CM which can be electronically signed by like minded persons and sent. United we can win.

  2. I must congratulate Sri Balakrishnan for his untiring efforts and personal sacrifice in the cause of saving what is justifiably the right of the majority of this country.It is now obvious that the koodan kulam nuclear power plant is also under the grip of NGO’s commandeered by Rome and the Indian arm from Delhi in the form of the mafioso.I agree with Sri Sankaran that this should and must be translated into English so that petitions can be drafted ,a movement created and balance restored.My knowledge of Tamil Is insufficient to do this job correctly to meet the requirements of law.Please if there is anything at all that i can do let me know.I am now an old man and death does not deter me.I will gladly lay down my life for my mother. Ganesh.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s