My reply to the blasphemous story on Andal and Periyaazhwar. (please read and circulate)


ஆண்டாள் நோன்பும், அடாவடிக் கதையும்.
குரங்கின் கையில் கிடைத்த பூமாலையைப் போல காமுகன்கையில் கிடைத்த
பாமாலையும் சின்னாபின்னமாகி விடும்.அதுதான் ஆண்டாளது உயரிய பாடல்
 ஒன்றுக்குநிகழந்திருக்கிறது. பாவை நோன்பை முடித்த கையோடு,
அனங்கனைத் தொழுது வேண்டிக் கொண்ட ஆண்டாள்,
  நாச்சியார்திருமொழியின் முதல் பத்தின் எட்டாவது பாசுரத்தில்
“மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய்மன்மதனே” என்று,
மனிதனை மணம் புரிய மாட்டேன், மணந்தால்பார்க்கடல் வண்ணனான
பரந்தாமனைத்தான் மணம் புரிவேன்என்று சொன்னாலும் சொன்னாள்,
முற்போக்கு எழுத்தாளர்ஒருவருக்கு சிந்தனைக் கடல் பொங்கி விட்டது.
ஆண்டாள் ஏன்அப்படி எழுதினாள் என்று ஆராய்ந்தார்.
அந்த ஆராய்ச்சிக்கு எந்தஆதாரத்தையோ அல்லது சரித்திரச் சான்றுகளையோ
அவர்தேடவில்லை. மாறாக, காமக் கண்ணோட்டத்தில் ஒரு கதையைப்பின்னினார்.’
அதை ஆண்டாள் கதையின் மறு வாசிப்பு என்றும்சொல்லிக் கொண்டார்.
 அந்த வாசிப்பைப் பல்கலைக் கழகமாணவர்களுக்கான பாடப்புத்தகத்திலும் வைத்து விட்டார்கள்.
இதுவே தற்கால மக்களது தரம்!
நோன்பு என்னும் தலைப்பில் இடம்பெற்ற அந்தச் சிறுகதை
மனோன்மணியம் சுந்தரனார் கல்லூரி மாணவர்களுக்கானபாடமாக
 தமிழ்ப் பாடத் திட்டத்தில் நுழைக்கப்பட்டுள்ளது.
நோன்புஎன்றாலே எந்தத் தமிழ் ஆர்வலருக்கும் பாவை நோன்புதான்நினைவுக்கு வரும்.
 சங்க கால வழக்கமான அந்த நோன்பைப்பற்றி நமக்கு அதிகம் தெரியாது.
ஆனால் அதைப் பற்றி நமக்குஒரளவேனும் தெரிய வருகிறது என்றால்
அதற்கு ஆண்டாள்தான்காரணம். இறைவனுக்குகந்த பூமாலை
 சூடிக் கொடுத்ததோடுமட்டுமல்லாமல், அவள் தொடுத்த பாமாலையின் மூலமாகவும்
நோன்பைப்பற்றியும், எப்படி நோன்பிருக்க வேண்டும் என்பதைப்பற்றியும்
 நமக்குச் சொல்லியிருக்கிறாள். “நோக்கின்றநோன்பினைக் குறிக் கொள் கண்டாய்” என்று ஆண்டாள்சொல்லிவிட்டதால் அதிலிருந்து ‘நோன்பு” என்ற தலைப்பை
அந்தக்கதாசிரியர் குறித்துக் கொண்டார். ஆனால் அந்த நோன்பை
அவள்ஏன் மேற்கொண்டாள் என்று அவள் மீண்டும் மீண்டும் சொல்வதைமட்டும்
 அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் அவர்பெயரிலும்,
அவர் பின்பற்றும் கொள்கையிலும் இருக்கிறது.
அவரது பெயர் டேனியல் செல்வராஜ். பழைய தமிழ்இலக்கியங்களை
முற்போக்குச் சிந்தனையுடனும், தற்காலத்துக்குஏற்றவாறும் எழுதி
மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்என்னும் கொள்கை உடைய
கம்யூனிஸ்ட் தலைவர்ஜீவானந்தத்தைப் பின்பற்றுபவர் என்று Frontline கட்டுரை கூறுகிறது. (http://www.hindu.com/fline/fl2416/stories/20070824506012000.htm ).
அந்தக்கொள்கையை அவர் சார்ந்திருக்கும் சமயக் கதைகளில் வைத்துக்கொள்ளட்டும்.
எந்த இலக்கியத்தில் பொருந்துமோ, அதில்முற்போக்கைப் புகுத்திக் கொள்ளட்டும்.
ஆனால் பூமாதேவியேஉருவெடுத்துப் பிறந்தாள் என்று கருதப்படும்
ஆண்டாளைதாசிக்குப் பிறந்தவள் என்றும், திருவரங்கப் பெருமானுக்கே
மாமனாரான பெரியாழ்வார், கோவிலுக்கு வந்த அப்சரஸ் போன்றபெண்களைப் பார்த்ததால்
 எழுந்த உள்ளத்து அரிப்பையும், உடல்தினவையும் தணித்துக் கொள்ள தாசி வீட்டுக்குச் செல்வதைவாடிக்கையாகக் கொண்டிருந்தவர் என்றும் எழுதுவதாமுற்போக்குச் சிந்தனை?
தெய்வத்தின் மீது கொண்ட காதலால் மனிதனை மணக்கஆண்டாள் விரும்பவில்லை.
ஆனால் இந்த முற்போக்குக் கதாசிரியருக்கு இதெல்லாம் புரியாத விஷயம்.
ஆண்டாளுக்கு ஏதோ நெருக்கடி ஏற்பட்டது, அதிலிருந்து தப்பிக்க மனிதனை மணக்க மாட்டேன்
என்று சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக அவர் புனைகிறார்.
இந்தப் புனைதலுக்குப் பின்னணியில் காமத்தைத் தவிர வேறு எதையும்
யோசிக்க அவருக்குத்  தெரியவில்லை. கற்பனைச் சூழ்நிலைகளைப் புனைவதற்கு
எந்தக் கதாசிரியனுக்கும் உரிமை உண்டு. ஆனால் அவற்றை
அவர் கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்டுபுனைந்திருந்தால்
யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை. ஆனால்உண்மையில் வாழ்ந்து,
 உன்னத பிறவிகளாக இருந்து, இன்றும் கொண்டாடப்பட்டு வரும்
பெரியாழ்வார், ஆண்டாள்போன்றவர்களது வரலாற்றைத் திரித்து,
 காமக் கண்ணோட்டத்தில் எழுதுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதா?
அதிலும் இந்த இருவரது வாழ்க்கைக் குறிப்புகள் ஏறத்தாழ பத்துமூலங்களில் இருக்கின்றன.
அவையாவன:-
(1) இவர்கள் இருவருமே தங்கள் பாசுரங்களில் காட்டுயுள்ள அகச்சான்றுகள்.
(2) 1000 வருடங்களுக்கு முன்பே ராமானுஜர் காலத்தில்கருடவாஹன பண்டிதர்
என்பவரால் வடமொழியில் இயற்றப்பட்ட”திவ்யசூரி சரிதம்”
(3) பின்பழகாரம் பெருமாள் ஜீயர் எழுதிய ‘குரு பரம்பரா பிரபாவம்”
(4) மணவாள மாமுனிகள் இயர்றிய ‘உபதேச ரத்ன மாலை’
(5) வேதாந்த தேசிகர் எழுதிய “தேசிகப் பிரபந்தம்”
(6) மூவாயிரப்படி “குரு பரம்பரா பிரபாவம்”
(7) வடமொழியில் இயற்றப்பட்ட “பிரபந்நாம்ருதம்”
(8) கந்தாடையப்பன் எழுதிய “பெரிய திருமுடியடைவு”
(9) திருவரங்கம் பெரிய கோவில் வரலாறு கூறும் “கோயிலொழுகு”
(10) பல ஆசாரியர்கள் வழங்கிய தனியன்கள், வாழித்திருநாமங்கள்.
பெரியாழ்வாரும், ஆண்டாளும் வாழ்ந்த வாழ்க்கையை விவரிக்க,
இத்தனை ஆதார நூல்கள் இருக்க, அவற்றையெல்லாம் ஒதுக்கி,
அவை எதிலும் சொல்லப்படாத, யாராலும், கனவிலும் கூடநினைக்க முடியாத
பாத்திரப்படைப்பாக செல்வராஜ் அவர்கள் எழுதியிருக்கிறாரே, என்ன காரணம்?
 இந்து மத துவேஷமா?ஆண்டாள் சரித்திரத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே
அவள்பால் மக்கள் ஈர்க்கப்படுவதால், அதைக் கெடுக்க வேண்டும் என்று
வேண்டுமென்றே செய்யப்படும் மத மாற்ற மூளைச் சலவை முயற்சியா?
அல்லது அவரது மன அழுக்கின் வெளிப்பாடா? அப்படி எழுதியதன் மூலம்
பெரியாழ்வாரையும், ஆண்டாளையும்மட்டும் செல்வராஜ் இழிவுபடுத்தவில்லை.
 ‘பார் முழுதாண்ட பஞ்சவர் குலமுதல்’வனான ‘சீர் கெழு செங்கோல் சீவல்லபன்’
(சித்தன்ன வாயில் கல்வெட்டு) என்னும் பாண்டிய அரசனையும் இழிவு படுத்தியுள்ளார்.
தமிழர் கலாசாரத்தையும்கேவலப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்ல,
 தமிழ் ஒருகாட்டுமிரண்டி மொழி என்று பெரியார் சொன்னதையும் உண்மைஎன்றே நிரூபித்துள்ளார்.
ஆம், பெரியார் வழித் தோன்றல் இவர் என்று சொல்லும் வண்ணம் எழுதப்பட்ட
இந்தச் சிறுகதையின் மூலம் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று
பெரியார் சொன்னதை ஆசிரியர் செல்வராஜ் அவர்கள் மெய்ப்பித்துள்ளார்.
தமிழை இயல் தமிழ், இசைத் தமிழ்,நாடகத் தமிழ் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதைக்காட்டுமிராண்டித் தமிழ் என்று சொன்னவர் பெரியார்.
 தமிழைஅப்படிச் சொன்னீர்களே என்று அவரை ஒரு பேட்டியாளர்கேட்டதற்கு
அவர் சொன்ன பதில்
“ஆமாம் நான் சொன்னேன்.என்ன தப்பு.. ஒருத்தனோடு ஒருத்தன் சண்டை போடும் போதுதிட்டுகிறானே?
சண்டை போட்டவனை மட்டுமா திட்டுகிறான்?அவன் மனைவி மக்கள் எல்லோரையும்தானே திட்டுகிறான்?எப்படித் திட்டுகிறான் என்று பெரியார் சொன்னதைக் கேட்டவர்அவ்வார்த்தைகளை எழுத
மனமில்லாமல் விட்டு விடுகிறார் “
(ஆதாரம்நெல்லை ஜெபமணி அவர்கள் எழுதிய “கண்டுகொள்வோம் கழகங்களை!:”பக் -41).
அதாவது பெரியார்,தமிழைக் குறை சொல்லவில்லை.
அதைப் பேசியவர்களதுபேச்சைத்தான் குறை சொல்லியுள்ளார்.
பேசுபவனால், ஒருமொழிக்கு உயர்வும், அல்லது காட்டுமிராண்டி மொழி என்றதாழ்வும் கிடைக்கிறது
 என்பதை அவரது பேச்சு காட்டுகிறது.
அதைத்தான் நாம் இயல், இசை, நாடகத் தமிழின் மூலம்காண்கிறோம்.
உன்னத விவரங்களைக் கொடுக்கும் போது, அதைக்கொடுக்க உதவும் மொழியும் உயர்வு பெறுகிறது.
 அந்த மொழிக்குசக்தி கூடுகிறது. அதை உறுதிபடுத்தியே ஆண்டாளும்,
ஏனையஆழ்வார்களும், ஒவ்வொரு பாடல் தொகுப்பின் முடிவிலும்,
அந்தத்தமிழ்ப் பாடல்களைப் பாடுவதால் இன்னின்ன பலன்கள்உண்டாகும்
என்று சொல்லியுள்ளார்கள். உதாரணமாக,மானிடருடன் வாழகில்லேன் என்று
ஆண்டாள் கூறும் நாச்சியார்திருமொழியின் முதல் பத்தை
 “விருப்புடை இன் தமிழ்மாலைவல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவாரே” என்றுமுடிக்கிறாள்.
அதாவது இனிய தமிழில் மாலை போல்கோர்க்கப்பட்ட
அந்தப் பத்துப் பாடல்களைப் பாடுபவர்கள்விண்ணிலுள்ள தேவர்களுக்கெல்லாம் அரசனான பரந்தாமனதுஅருகாமையை அடைவார்கள் என்கிறாள்.
தமிழால் இறைவனைஅடைய முடியும் என்பதையும், பக்தியை ஊட்ட முடியும்என்பதையும்
இந்த வரிகள் காட்டுகின்றன. ஆண்டாளது மறக்கமுடியாத மற்றொரு பாடல் தொகுப்பு,
‘வாரணமாயிரம்’ என்றுதொடங்கும் இறைவனை மணம் செய்து கொண்ட கனவுப்பாடலாகும்.
அவற்றை முடிக்கும் போது
 “கோதை சொல் தூயதமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர் வாயுநன் மக்களைப் பெற்றுமகிழ்வரே”
 என்கிறாள். குழந்தைச் செல்வத்தை ஈட்டித்தரும்வல்லமையைத் தமிழ் பெறும் வண்ணம் ஆண்டாள்இயற்றியிருக்கிறாள். அந்தத் தமிழே மருந்தாகும் வண்ணம்”கோதை சொல் மருந்தாம்”
என்று நாச்சியார் திருமொழியைமுடிக்கிறாள். தான் இயற்றிய சொல்லால் தமிழைமருந்தாக்கினாள்.
பேசுபவரது குணத்தால், எண்ணத்தால், சொல்லப்படும் சொற்களால்தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார்கூறியதற்கொப்பாகவே, தங்கள் எண்ணத்தால், பக்தியால், இன்தமிழிலும், தீந்தமிழிலும் இன்ன பிறவாக உயர்வாகச்சொல்லப்பட்ட தமிழிலும், ஆழ்வார்கள் அளித்த சமயத் தமிழால்,தமிழும் உயர்வு பெற்றது. அதைப்பாடினவர்களும் உயர்வுபெற்றார்கள்; வருங்காலத்தில் அவற்றைப் பாடுபவர்களும் உயர்வுபெறப்போகிறார்கள் என்பதை ஒவ்வொரு பத்து பாடல்கள்முடிவிலும் ஆழ்வார்கள் சொல்லியுள்ளார்கள். அப்படிப்பட்ட உயர்தமிழ்ப் பாடல்களை ஒன்றியும், ஊன்றியும் படிக்காததால்,செல்வராஜ் அவர்கள் கொடுத்த சிறுகதை தமிழுக்கு ஒருபுண்கலனாக அமைந்துள்ளதே தவிர பொன்கலனாக அல்ல. அவர்எழுதிய தமிழைப் படிக்கவும் நா கூசுகிறது. காட்டுமிராண்டித்தமிழ்எப்படி இருக்கும் என்பதை அவர் நன்றாகவே காட்டி விட்டார்.
தமிழைத்தான் இழிவு படுத்தினார் என்பது மட்டுமல்ல, ஆண்டாள்காலக்கட்டத்துக்கு ஒவ்வாத காட்சிகளையும், ஆண்டாள்,பெரியாழ்வார், பாண்டிய மன்னன் ஸ்ரீவல்லபன் ஆகியோரதுகுணநலன்களையும்,  வரலாற்று நிகழ்வுகளையும் திரித்து,பொருந்தாத வகையில், அபத்தக் களஞ்சியமாக  சித்தரித்துள்ளார்.அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1.   ஸ்ரீவில்லிபுத்தூரில் பௌர்ணமி நாளிரவில் கதை நடக்கிறது.பொழுது விடிந்தால் தேர்த் திருவிழாவாம். அந்தத் திருவிழாவைப்பற்றின இன்ப நினைவில் மக்கள் எல்லோரும் உறங்கிக்கொண்டிருக்கிறார்களாம். தேர்த் திருவிழாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர்பெயர் போனது என்பது உண்மை. அது இந்தக் கதாசிரியருக்குத்தெரிந்திருக்கிறது. ஆனால் அந்தத் தேர்த் திருவிழா என்று,எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்பதை அவர் அறியாமல்,கதை எழுத வந்துவிட்டார். தேர்த் திருவிழா ஆரம்பித்ததேஆண்டாள் வைபவம் நிகழ்ந்த பிறகுதான். இறைவனை அவள்மணந்த அதிசய நிகழ்ச்சிக்குப் பிறகுதான் ஆண்டாள் கோவில்கட்டப்பட்டு, அவள் பிறந்த ஆடி மாதம், பூர நட்சத்திரத்தன்று தேர்த்திருவிழா கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டது. அந்த ஆடிப்பூரமும்,பௌர்ணமியன்றோ, அதற்கு மறுதினமோ வராது.
2.   அந்தப் பௌர்ணமி இரவில் அரசன் அவனது கோட்டையின்உப்பரிகையில் வருகிறானாம். அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர்வடபெருங்கோவிலின் உயர்ந்த கோபுரத்தைக் காண்கிறானாம்.ஆண்டாள் வாழ்ந்த காலக்கட்டத்தில் கோபுரம் கட்டப்பட்டதாஎன்பதே சர்ச்சைக்குரியது. அது மட்டுமல்லாமல்,ஸ்ரீவில்லிபுத்தூரில் கோட்டையும், அரண்மனையும் இருந்ததற்கானஆதாரமும் எதுவும் இல்லை. ஸ்ரீ வல்லபன் காலத்தில்,வாணிபப்போக்குவரத்து கொண்ட இடமாக ஸ்ரீவில்லிபுத்தூர்இருந்திருக்க வேண்டும் என்று எண்ணும் வண்ணம் ‘தேசிஉய்யவந்தப் பட்டணம்” என்னும் இடம் அந்தப் பகுதிகளில்இருந்திருக்கிறது. (கல்வெட்டு எண் 269, A.R. No 56 of 1929. ராமநாதபுர மாவட்டம்திருப்பட்தூர் தாலுகாசிவபுரியில் உள்ளஸ்வயம்ப்ரகாசர் கோவில்திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீவல்லபனது 24 ஆம் ஆட்சியாண்டு) தேசி உய்யவந்த பட்டணம்என்னும் பெயரைக் கொண்டு, இது பிற ஊர்களிலிருந்து வாணிபம்செய்ய வந்த மக்கள் குடியமர்ந்த இடமாக இருந்திருக்கிறது என்று அறியலாம். ‘கேரள சிங்க வளநாட்டி’லிருந்து இங்கு மக்கள்வந்திருக்கிறார்கள். (மேற்படி கல்வெட்டு, ஸ்ரீ வல்லபன் காலம்).பின்னாளில் பாளையக்காரர்கள் பாதுகாப்பில் இந்த இடம்இருந்திருக்கிறது. பொதுவாக வாணிப மையங்களைச் சுற்றி பாளையங்கள் மற்றும் காவல் அமைப்புகள்உருவாக்கப்பட்டுள்ளதை கொங்கு நிலங்களில் காணலாம்.ஸ்ரீவில்லிபுத்தூரும், 1750 வரை கொல்லம்கொண்டான்பாளையக்காரர் என்பவர் வசம் இருந்திருக்கிறது என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. அவர்களது கோட்டை நவாப் தளாபதிகள் வசம் சென்றது. இந்த விவரங்கள் மூலம், ஸ்ரீவல்லபன் காலத்தில்அவன் தங்கும் வண்ணம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரண்மனை,கோட்டை கொத்தளங்கள் இருந்தனவா என்பதுசந்தேகத்துக்குரியது. வெறும் காவல் படை வீடுகள் தான்இருந்திருக்க வேண்டும். மேலும் அந்த அரசன் மதுரையில்தான்வசித்து வந்தான் என்று ஆழ்வார்கள் சரித்திரத்தைக் கூறும் குருபரம்பரை பிரபாவம் என்னும் நூல் கூறுகிறது. மதுரையிலிருந்துஸ்ரீவில்லிபுத்தூர் சுமார் 75 கி.மீ தொலைவில் இருக்கிறது. எனவேஸ்ரீவல்லப அரசன் தன் கோட்டையின் உப்பரிகையிலிருந்துவடபெருங் கோவில் கோபுரத்தைக் கண்டான் என்பது, ஏதோமனதுக்குத் தோன்றினபடி எழுதியதுதான். மொத்தக் கதையுமேதாறுமாறாக மனம் போன போக்கில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால்மிக உயர்ந்த உண்மையான பாத்திரங்கள் பெயரில் கதையைப்பின்னியிருப்பதுதான் வேதனைக்குரியது. கண்டனத்துக்குரியது.
3.   கதையின் 2 ஆம் பக்கத்திலேயே கதாசிரியர் சொல்லும் தவறானவிவரம், கோவிலை ஒட்டி, கிழக்கு ரத வீதியில், தாசி வீடுஇருந்தது என்பது. ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊர் ‘அன்ன வயல்’கள்சூழப்பட்டதும், “நீதியால் நல்ல பத்தர் (பக்தர்) வாழுமூர், நான்மறைகள் ஓதும் ஊர்” என்று வைணவ ஆசாரியர்களால்வருணிக்கப்பட்டதுமான சிறப்புடைய ஊர்.  இந்த வருணனைகற்பனை அல்ல என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலின் தெற்குச்சுவரில் உள்ள ஒரு கல்வெட்டு மூலம் அறியலாம். (கல்வெட்டுஎண் 91. A.R. No 548 of 1926) வீரப் பாண்டியனின் 13 ஆம் ஆட்சிஎதிராண்டில், செய்யப்பட்ட நில விற்பனைகளையும்,கொடைகளையும் இது தெரிவிக்கிறது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூரைமல்லி நாட்டின் ‘பிரம்மதேயம்’ என்று குறிக்கப்பட்டுள்ளது.பிரம்ம்தேயம் என்றால், வேதவல்லுனர்களுக்குத் தானமாகஅளிக்கப்பட்டது என்று பொருள். அங்கு ஒரு கோவில் இருக்கும்.அதைச் சுற்றி வேத வல்லுனர்கள் வாழ்வார்கள். அங்குள்ள எல்லாமக்களுமே அந்தக் கோவிலின் உயர்வுக்கும், வேதம் தழைக்கவும்ஏதேனும் ஒரு கைங்கரியத்தில் ஈடுபட்டிருப்பார்கள். சிறந்தபக்தர்களாகவும் இருப்பார்கள். பிரம்மதேயமாக இருந்தஅமைப்பைத்தான் ஆசாரியர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வாழ்த்துப்பாடலில் பிரதிபலித்துள்ளார்கள். அப்படிப்பட்ட ஒருபிரம்மதேயத்தில் தாசி வீடுகள் இருக்க முடியாது.
4.   ஒரு ஊரை, பிரம்ம தேயமாக அரசன் அறிவிப்பான். அந்தஅறிவிப்பு ஸ்ரீவில்லிபுத்தூரைப் பொருத்தமட்டில், பெரியாழ்வாரைமுன்னிட்டுத்தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். எந்த அரசனைக்காமாந்தகனாக செல்வராஜ் வர்ணிக்கிறாரோ அந்த அரசனால்கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ஆரம்பத்தில்பெரியாழ்வார் நந்தவனம் அமைத்து, பூமாலைக் கைங்கரியம்செய்து வந்த சாதாரணாராகத்தான் இருந்தார். அவர் ஒரு வேதவிற்பன்னர் அல்லர். ஆனால் ஓரிரவில்  தெய்வமே அவரதுகனவில் வந்து, மதுரைக்குச் சென்று அரசன் கேட்ட சமயத்தத்துவக் கேள்விக்கு பதில் அளிக்குமாறு சொல்லவே அவர்மதுரைக்குச் சென்று அரசனுக்கு விளக்கம் அளித்தார். திருடனாகஇருந்த வால்மீகிக்கு எவ்வாறு திவ்விய ஞானம் பிறந்ததோ,அவ்வாறே ஆழ்வாருக்கும் தெய்வ அனுக்கிரகத்தால் ஞானம்பிறந்தது. அவர் அளித்த விளக்கத்தால் அரசன் உட்படஅனைவரும் தெளிவு பெற்றனர். அவரைப் போற்றி, அவருக்குப்’பட்டர் பிரான்’ என்னும் பட்டமும் அளித்தனர். அதன்தொடர்ச்சியாக அவர் வாழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரை பிரம்ம தேயமாக,ஸ்ரீ வல்லபப் பாண்டியன் அறிவித்திருக்க வேண்டும். ஏனெனில்,பெரியாழ்வாரும், ஆண்டாளும் எழுதின பல பாசுரங்களில்பெரியாழ்வாரைப் “புதுவை மன்னன் பட்டர்பிரான்”, என்றும்”புதுவைக் கோன்” என்றும், ‘புத்தூர்க் கோன்’ என்றும் பலவாறாகச்சொல்லியுள்ளார்கள். கோன், மன்னன் என்னும் சொற்கள்தலைவன், அரசன் என்று குறிக்கும். இதனால் பட்டர் பிரானாகஇவர் பட்டம் பெற்றவுடன், இவர் வாழ்ந்த ஸ்ரீ வில்லிபுத்தூரையும்பிரம்மதேயமாக, அரசன் கொடுத்திருக்க வேண்டும். அதற்கு இவரேதலைவராக இருந்திருக்க வேண்டும்.  இவர்கள் இருவரும் எழுதினஅனைத்துப் பாசுரத் தொகுப்புகளிலுமே புத்தூர் கோன் என்னும்அடையாளம் அல்லது பட்டர் என்னும் பெயர் இடம் பெருவதால்,பெரியாழ்வார் பட்டர் பிரான் என்னும் பட்டம் பெற்றபிறகே,வில்லிபுத்தூரும் பிரம்மதேயமாக ஆன பின்பே பெரியாழ்வார்திருமொழியும், திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும்இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. அதற்கேற்றாற்போல “”திருவில் பொலிமா மறைவாணர் புத்தூர்த் திகழ் பட்டர்பிரான்” (பெதிரு -3-5-10) என்றும், “திருவிற்பொலி மறைவாணன்பட்டர்பிரான்” (பெரி– திரு – 4-1-10) என்று பெரியாழ்வாரேசொல்லியுள்ளதால், அந்த ஊரின் பிரம்மதேயச் சூழலும், அதன்மகுடம் சூட்டினாற்போல பெரியாழ்வார் விளங்கினதும்புலனாகின்றன. அந்தச் சூழலில் தாசி வீடுகள் இருந்தன என்பதும்,ஆண்டாளுக்குப் பெரியாழ்வாரே தனது தகப்பனார் என்றுதெரியாமல் 20 வயது வரை வளர்ந்தாள் என்பதும், அபத்தக்கற்பனைகள்.
5.   பௌர்ணமியன்று கதை தொடங்கும் முதல் பத்தியிலேயே,கண்டனத்துக்கிரிய கருத்தைச் சொல்கிறார் கதாசிரியர். வாழையடிவாழையாக ஆண்டவனுக்குத் தங்களை அடிமைப் பொருளாகஅர்பணித்துக் கொண்ட தேவதாசி வம்சத்து ஆண்டாள் என்கிறார்.இதுவே தவறான கருத்து. ஆனால் இங்கு அடிமை செய்யும் தேவதாசி என்பதை மட்டும் பார்ப்போம். ஏனெனில் இதில் தமிழ்ப்பண்பாடும், கோவில் கலாசாரமும் சம்பந்தப்படுகிறது. இந்தக்கதை, தமிழ் நாட்டுக் கோவில்களில் தேவ தாசிகள் இருந்தனர்,அவர்களை மக்களும், மன்னனும் காமக்கிழத்திகளாகப் பார்த்தனர் என்பது போன்ற எண்ணங்களை உருவாக்குகிறது. தமிழகக் கோவில் கலாசாரத்தின் உண்மை நிலவரங்களை மக்கள் அறியவில்லை என்றால், இப்படிப்பட்ட கதைகள் சொல்லும் கருத்துக்களே நிலைத்து விடும். எனவே உண்மை நிலையை நிரூபிக்க வேண்டியது அவசியமாகிறது.
6.   இந்து சமயத்தில் அடிமை என்னும் நிலை இருக்கிறது. இதையே தாசன், தாசி என்று இருபாலாருக்கும் சொன்னார்கள். இந்தச்சொற்களுக்கு அடிமை என்றே பொருள். தாசி, தாசன் என்றசொற்களைப் பக்தர்கள் தங்களைக் குறித்தே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யாருக்கு அடிமை என்றால்இறைவனுக்குத்தான் அடிமை. இறைவனுக்கு மட்டுமே அடிமை.மனிதனுக்கு மனிதன் அடிமை என்ற எண்ணமே இந்து மதத்தில்கிடையாது. இந்த அடிமையில் இரண்டு வகை இருந்துவந்திருக்கிறதுஒன்று ஒரு கோவிலுடன் தன்னை இணைத்துக்கொண்டுஅந்தக் கோவில் இறைவனுக்குத் தன்னை அடிமையாகசாஸனம் செய்து கொண்டுகோவில் தொண்டுகள் செய்வது.இரண்டாவது தனியாகக் கோவில் பணிகள் என்றில்லாமல்எந்தபணியில் இருந்தாலும்எந்ந்நேரமும்எக்காலமும் இறைவனுக்குத்தான் அடிமை என்னும் எண்ணத்துடன் இருப்பது. இந்த இரண்டுவகைகளுக்குமே இறைவன் தான் எஜமானன். இவர்கள்,இறைவனுக்கு மட்டுமே தாங்கள் அடிமை என்றுபிரகடனப்படுத்திக் கொண்டார்கள். ஆண்டவனுக்குத் தங்களைஅடிமையாக அர்ப்பணித்துக் கொணடவர்கள் எத்தனையோ பேர்இருக்கிறார்கள், இருந்திருக்கிறார்கள். பெரியாழ்வாரும்,ஆண்டாளும், அன்றைக்கும், இன்றைக்கும் உள்ள பல வைணவ அடியார்களும் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள்.பெரியாழ்வார், “எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி வந்து வழி வழி ஆட்செய்கின்றோம்” என்று திருப்பல்லாண்டில் கூறுகிறார். தந்தை, தாத்தா, கொள்ளு தாத்தா,எள்ளு தாத்தா என்று ஏழேழு தலைமுறைகளாக இறைவனுக்குஅடியவர்களாக ஆட்பட்டிருக்கிறோம் என்கிறார். அவரைப்போலவே ஆண்டாளும், “எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்உன்றன்னோடு உற்றோமே யாவோம், உனக்கே நாம்ஆட்செய்வோம், மற்றை நம் காமங்கள் மாற்று” என்று கேட்டுக்கொள்கிறாள். இவர்களைப் பின்பற்றியே வைணவப் பெரு மக்கள்அனைவரும், இன்றுவரை தங்களை இறைவனுக்கு அடிமை என்றுசொல்லிக் கொண்டும், தாசன், தாசி என்று தங்களை அழைத்துக்கொண்டும் இருக்கிறார்கள். தன்னைத் தோழர் என்றுஅடையாளப்படுத்திக் கொள்ளும் செல்வராஜ் அவர்களுக்குப்புரியும் வழியில் சொல்வதென்றால், இறைவன் ஒருவனேமுதலாளி என்று அன்றைய மக்கள் நினைத்தனர்.மற்றவர்களெல்லாம் அவனுக்கு அடிமைகளே. இன்றும் அப்படிநினைப்பவர் பலர் உண்டு. மக்கள் அனைவரும் அவனுக்குஅடிமைகளே. ஏனெனில் அவனன்றி மக்கள் உற்பத்தியேகிடையாது. அவனே படியளப்பவன். அவனே எல்லாமுமாகஇருப்பவன். இந்த அறிவைப் பெற்ற பெரியாழ்வாரும், மற்றும்பலரும், அவனுக்கு அடிமைகளாக இருந்தார்கள்.
7.   அந்த அடிமைத்தனத்துக்கு ஒரு சின்னமும் இருக்கிறது.அவனது சின்னத்தைப் பொறித்துக் கொண்டு, அவனுக்கே தாங்கள்ஆட்பட்டவர்கள் என்று சொன்னார்கள். தன் தந்தை, தாத்தாகாலத்திலிருந்து இறைவனுக்கு அடிமைப்பட்டோம் என்றும்சொன்ன பாடலுக்கு அடுத்த பாட்டில் “தீயிற் பொலிகின்றசெஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரத்தின் கோயிற் பொறியாலேஒற்றுண்டு நின்று குடி குடியாட் செய்கின்றோம்” என்கிறார்பெரியாழ்வார். அதாவது இறைவனிடம் அடிமை செய்பவர்கள்தாங்கள் என்பதை உறுதி படுத்த, அந்த இறைவனது சங்கு சக்கரப்பொறிகளை தீயில் சுட்டு, அவற்றைக் கொண்டு தங்கள்தோள்களில் அழியாத அடையாளச் சின்னங்களை ஏற்படுத்திக்கொண்டு தாங்கள் அவனுக்கு மட்டுமே சேவகம் செய்பவர்கள்என்று காட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த வழக்கம் இன்றும்வைணவத்தைப் பின் பற்றும் மக்களிடையே இருக்கிறது,பெரியாழ்வார் காலத்திலும் இருந்திருக்கிறது.
8.   இவர்களைத் தவிர இருந்த மற்றொரு வகை அடிமைகள்தங்களையே  கோவிலுக்குத் தானமாகவும், விலைக்கு விற்றுக்கொண்டும் கோவில் அடிமைகளாக இருந்திருக்கின்றனர்.இதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.நாகப்பட்டினம் கொறுக்கையில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோவில்கல்வெட்டின் மூலம், மொத்தம் 100 பேர் தங்கள் குடும்பத்தினர்சகிதமாக இறைவனுக்கு அடிமைகளாக சாசனம் செய்துகொண்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. திருவிடந்தைப்பெருமாள் கோவிலுக்கு 12 குடும்பங்களைச் சேர்ந்த மீன் பிடிப்பவர்தங்களை அடிமைகளாக அர்ப்பணித்துக் கொண்ட சாஸனம்இருக்கிறது. திருவக்கரைக் கோவில்தஞ்சாவூர் கீழையூர்க்கோவில்திருப்பாம்புரம் கோவில் ஆகியவற்றிலும் அடிமைகளாகத்தங்களை  சாஸனம் செய்து கொண்ட ஆதாரங்கள் இருக்கின்றன.இந்த அடிமைகளுக்கும் சூலப்பொறி வைத்த குறிப்புகள்இருக்கின்றன. இதைக் கொண்டு ஏதோ அடிமை வியாபாரம்நடந்தது என்று அதீதக் கற்பனையில் எழுதும் எழுத்தாளர்கள்இருக்கிறார்கள். ஆனால் பெரியாழ்வார் கூறுவதையும், இன்றும் வைணவ மக்கள் சங்கு சக்கரப் பொறியை தோளில் பொறித்துக்கொள்வதையும் பார்த்தாவது, இறைவனுக்கு ஆட்பட்டு இருத்தலின்அடையாளமாக, சூலப்பொறி இட்டுக்கொள்ளும் வழக்கத்தைப்பின்பற்றியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
9.   இந்த அடிமை விவகாரத்தின் தொடர்ச்சியாக அந்தச் சிறுகதைத்தொகுப்பின் 10, 11 ஆம் பக்கங்களில் இன்னுமொரு மாபெரும்அபத்தம் அரங்கேறுவதைக் காணலாம். ஆண்டாள் தேவ தாசிக்குப்பிறந்தவளாம். தேவதாசி என்றாலே இந்தக் கதாசிரியர்போன்றவர்களுக்கு காமக் கிழத்திகள் என்று எண்ணம். ஆண்டாள்கோவிலில் தேவதாசியாக நடனம் ஆடுவதைப் பாண்டிய மன்னன்ஸ்ரீவல்லபன் பார்த்தானாம். அதைக் கண்டு அவளை மோகித்து,போகப் பொருளாக எண்ணி அழைத்து விட்டானாம். அதை ஏற்றுச்செல்லாவிட்டால் மறுநாளே அவர்களுக்குக் கிடைக்கும்மானியத்தை நிறுத்துவிட உத்தரவு பிறக்குமாம். ஆண்டாளும்அவள் தாயும் தெருவில் நாய் போலச் சாக வேண்டி வருமாம்.என்ன ஒரு முற்போக்குச் சிந்தனை!? ஒருவரையும் பாக்கிவைக்காமல் எல்லோரையும் இழிவு படுத்தி விட்டார் செல்வராஜ்.அது மட்டுமல்ல, அந்தக் காலக்கட்டத்தில் கோவிலில்அடிமையாய் சேவகம் செய்தவர்கள் நிலை என்ன, என்ன சேவகம்செய்தார்கள், அவர்களுக்கு என்ன மானியம் கிடைத்தது, அதைஅரசன் மனம் போன போக்கில் நிறுத்த முடியுமா என்றேல்லாம்ஆராயாமல், நாலாந்தர சினிமா வசனம் எழுதியிருக்கிறார்.
10.  கோவிலில் அடிமைகளாகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டபெண்கள் தேவரடியார், பதியிலார், தளியிலார், தளிச்சேரிப்பெண்டுகள் என்னும் பல பெயர்களில் அழைக்கப்பட்டனர்.தேவரடியாள் என்னும் பெயர் இன்றைக்கு எந்த பொருளில்சொல்லப்படுகிறது என்பதைச் சொல்லத்தேவையில்லை., ஆனால்,ஆண்டாள் காலத்தில் அதாவது 1000 ஆண்டுகளுக்கு முந்தினகல்வெட்டுகளில் அது தெய்வத்துக்குத் தங்களை அடிமைகளாகஅர்ப்பணித்துக் கொண்ட ஒரு ஒப்பற்ற நிலையைக் குறித்தது.அந்த நிலையை ஒரு திருத் தொண்டாகச் செய்தனர்.தேவரடியார்கள் கோவிலில் திருவலகிடல், திருமெழுகிடல்,இறைவனுக்கு அமுது படைப்பதற்கான அரிசியைத் தூய்மைசெய்தல், திருப்பதிகம் பாடுதல், இறைவனுக்குக் கவரி வீசுதல்ஆகியவற்றைச் செய்தனர். விழாக் காலங்களில் திரு நீற்றுத்தட்டையும், மலர்த் தட்டையும் ஏந்தியிருந்தனர்.
11.  தளியிலார் என்பவர்கள் ஆடல் பாடல்களில் வல்லவர்கள்.இவருள் சிவன் கோவிலில் பணி செய்தவர்கள் ‘ரிஷபத் தளியிலார்:என்றும், வைணவக் கோவில்களில் பணி செய்தவர்கள் “ஸ்ரீவைஷ்ணவ மாணிக்கம்” என்றும் அழைக்கப்பட்டனர். பார்ப்ப்வர்கள்மனம் தறி கெடும் படியும், போகப்பொருளாகாவும் இவர்கள்இருந்தனர் என்றால், இப்படியா சிறப்புப் பெயர் பெற்றிருப்பார்கள்?
12.  பதியிலார் என்போர் பெரிய கோவில்களில் அதிக எண்ணிக்கையில்இருந்தனர். தஞ்சைப் பெரிய உடையார்க் கோவிலில் நானூற்றுக்கும்மேற்பட்டப் பதியிலார் பணியாற்றி இருக்கின்றனர். அவர்களது வீட்டுஎண், தெருப் பெயர் போன்ற விவரங்கள் எல்லாம் கல்வெட்டுகளில்குறிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேவரடியார்களும், பதியிலார்களும் ஒருவகுப்பைச் சேர்ந்தவர்களில்லை. எல்லா வகுப்புப் பெண்டிரும்தேவரடியார்களாக இருந்திருக்கின்றனர். முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தில் ‘ஆச்சப் பிடாரன் கணபதி நம்பி’ என்கிற அழகியபாண்டியன் பல்லவரையன் என்னும் படைத் தலைவன்,பாலாற்றங்கரையிலுள்ள திருவல்லம் கோவிலில் பணிகள்செய்வதற்கு தன் குடும்ப்ப் பெண்களைத் தேவரடியார்களாகஒப்படைத்தான். அப்பெண்கள் சூலப்பொறி பொறிக்கப்பட்டு, கோவில்பணிகளில் ஈடுபட்டனர் என்று அந்தக் கோவில் கல்வெட்டுதெரிவிக்கிறது. ஆடல் பாடல் என்பதும் கோவில் பணிகளில்ஒன்றாகச் செய்யப்பட்டது. தெய்வத்துக்கே அர்ப்பணித்துக் கொண்டஇவர்கள் விரும்பினால், ஒருவரை மணம் செய்து கொண்டு வாழவும்வசதியளிக்கப்பட்டது. சதுரள் சதுரி என்ற தேவரடியாள், நாகன்பெருங்காடன் என்பவனை மணந்து கொண்டாள் என்று கூறும்திருவொற்றியூர்க் கல்வெட்டு மூலம் அவர்கள் தெய்வத்துக்குஅடிமைத் தொண்டு செய்தாலும், தங்கள் வாழ்க்கையை எப்படிஅமைத்துக் கொள்ளலாம் என்ற சுதந்திரம் இருந்தது என்பதும் தெரியவருகிறது. செல்வராஜ் போன்றவர்கள் நினைப்பது போலஇறைவனுக்கு ஆடலும் பாடலும் சமர்ப்பித்த பெண்கள்,போகப்பொருளாகப் பார்க்கப்படவில்லை. மேற்சொன்ன கல்வெட்டுச்செய்திகள் ஆண்டாள் வாழ்ந்த காலக்கட்டத்தை ஒட்டியவை என்பதுகுறிப்பிடத்தக்கது.
13.  செல்வராஜ் கதையில் சொல்வது போல அரசன் மானியத்தைநிறுத்தி, இவர்கள் நாய் போல நடுத்தெருவுக்கு வரும் நிலைஅன்று இல்லவே இல்லை. அரசன் தன் மனம் போன போக்கில்மானியம் தரவில்லை, தந்ததைப் பிடுங்கவும் இல்லை. எந்தக்கொடையையும் சாஸனம் செய்து வைத்தார்கள். அதைமுறைப்படி கொடுக்க ஏற்பாடுகளும் செய்திருந்தார்கள்.பெரும்பாலான கொடைகள் நிலமாக இருந்தன. அவற்றில்கிடைக்கும் விளைச்சலே இவர்களுக்கு வருமானமாகும்.தளியிலார், தேவரடியார், தளிச்சேரிப் பெண்டுகள் ஆகியோருக்கு”பாணக் காணி” “நட்டுவக் காணி” என்னும் பெயரில் நிலங்கள்கொடுக்கப்பட்டன. தமிழ்க் கூத்தாடுபவர்களுக்கு “கூத்தாட்டிக்காணியும்”, இசை பாடும் முரலியனுக்கு ” முரலியக் காணி”யும்கொடுக்கப்பட்டது. “பதியிலார்க் காணி”, “சாக்கைக் காணி”, “வீணைக் காணி”, “உவச்சக் காணி” போன்றவற்றை இந்த மக்கள்பெற்றனர். அன்றைய வாழ்க்கை முறையைத் தெரிந்துகொள்ளாமல், செல்வராஜ் அவர்கள் கொச்சைப்படுத்திஎழுதிவிட்டார்.
14.  அம்மாவும், பெண்ணுமாக, தங்கள் தாசிக் குலத்தை நொந்துகொள்ளும் வசனத்துக்கிடையே, பெரியாழ்வார் பெற்ற பெண்ணானதான், தாசிக்குப் பிறந்ததால், தாசியாகவே வாழ வேண்டுமா என்றுஆண்டாள் எண்ணுவதாக செல்வராஜ் எழுதுகிறார்.அப்பொழுதுதான் ஆண்டாளுக்குப் பெரியாழ்வார் தனது தந்தைஎன்று தெரிய வந்த்தாம். தன் மனதில் அவள் அரற்றுகிறாளாம் –அப்பாநான் தேவதாசியின் வயிற்றில் பிறந்ததனால் என்தலைவிதி இதுதானாபடைப்பில் எல்லோரும் சமம் என்றுபேசும் உங்கள் தத்துவம் சொல்லித் தந்தது இதுதானா?”செல்வராஜ் போன்றோருக்கு பிடித்தமான பாயிண்ட் இது! ஆனால்சமதர்மத்தைப் பற்றிப் பேச செல்வராஜ் இப்படி ஒரு காட்சியைத்தர வேண்டுமா? பெரியாழ்வார் பாசுரத்தைப் படித்திருந்தாலேதெரிந்திருக்குமே? பெரியாழ்வார் வேயர் குலத்தில் உதித்தவர்.வேய் என்பது மூங்கிலைக் குறிக்கும். மூங்கில் கம்புகள் மீதுநின்றாடும் கழைக்கூத்து அமைப்புஸ்ரீவில்லிபுத்தூர்க் கோவிலில்செதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி ஒருகாலத்தில் மூங்கில் காடாகஇருந்திருக்கலாம். மூங்கில் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்பதால்அந்த ஊருக்கும், அதில் வாழ்ந்த மக்களுக்கும் ஆதியில் வேயர்என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். அப்பொழுதே சுதை வடிவிலானவடபத்ர சாயி அங்கு கோவில் கொண்டிருக்கிறார். பின்னாளில்வில்லி என்பான் அந்தப் பெருமாளைக் கண்டெடுத்து கோவில்கட்டியிருக்கிறான். அவன் காலத்தில் புதிதாக நிர்மாணம்செய்யவே அது புத்தூர் என்றும், அவன் பெயரைக் கொண்டுவில்லிபுத்தூர் என்றும் பெயர் பெற்றது. அதற்கு முந்தினகாலத்திலேயே அந்தப் பகுதியில் இருந்த வேயர் மக்கள் குடியில்பெரியாழ்வார் தோன்றியிருக்க வேண்டும். வேயர் என்பதற்குஇன்னொரு பொருளும் உண்டு. வேயர் என்றால் ஒற்றன் வேலைசெய்பவன் என்று பொருள். ஒற்று வேலை என்பது அரசுப்பணியாகும். பல தலைமுறைகளாக அவரது முன்னோர் ஒற்றுப்பணியில் ஈடுபட்டிருக்கக்கூடும். ஒற்றுப் பணியில் இருந்தாலும்வீர்ர்களாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் தன்னை “வீரணிதொல் புகழ் விட்டு சித்தன்” என்று பெரியாழ்வார் திருமொழி 4-6-10 இல் குறிக்கிறார். இன்னொரு இடத்தில் “பாழித்தோள் விட்டுசித்தன்” என்று சொல்லிக் கொள்கிறார் (பெரிதிரு -4-5-10). பாழிஎன்பதற்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன. ஆனால் தோள் என்றுசேர்த்துச் சொல்வதால், வலிமை, போர் என்னும் அர்த்தங்களேபொருத்தமாக இருக்கும். வீரத்துக்குப் பெயர் போன மரபில் அவர்வந்தவராக இருக்க வேண்டும். நாளடைவில், அவரதுமுன்னோர்கள் வேயர்களாகப் பணியாற்றியிருக்க வேண்டும்.அதனால் இவர் வேயர் குலத்தவராகிறார். வேயர் குலத்தில் பிறந்தஇவர் பாடின திருப்பல்லாண்டைக் கேட்டுத்தான் இன்றைக்கும்எல்லா கோவில்களிலும் பெருமாள் நாளை ஆரம்பிக்கிறார். இவர்பாடின சென்னியோங்கு முதலான பத்துப் பாசுரங்களே, மோட்சத்துவழிகாட்டும் சாதனம் என்று வைணவ ஆச்சாரியர்கள்அறுதியிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். அதில் “வேயர் தங்கள்குலத்துதித்த விட்டு சித்தன் மனத்தே கோவில் கொண்டகோவலன்” என்னும் அந்த நாராயணனை அந்தப் பத்துப்பாசுரங்களால் பாட வல்லார் இறைவனுக்கு அணுக்கர்கள்ஆவார்கள் என்று முடிக்கிறார்.  உயர் குலம் என்றுசொல்லப்படுகிறவர்கள் உள்ளிட்டோர் அனைவருமே இந்தப்பாசுரங்களைப் பாடிப் பாடியே உய்யும் வழி தேடுகின்றனர்.சமத்துவம் பற்றிப் பேச செல்வராஜ் அவர்கள் விழைந்தால், வேயர் குலத்துதுதித்த பெரியாழ்வாருக்கு வைணவத்தில்கொடுக்கப்பட்டுள்ள உயர்வையும், மேன்மையையும் பற்றிப்பேசியிருக்கலாம். ஆனால் அவரையல்லவா இழிவுபடுத்திப் பேசிவிட்டார்?
15.  செல்வராஜின் காமக் கண்ணில் எல்லாமே காமமாகத்தெரிகிறது. கோவிலில் நடனமாடும் பெண்ணைப் பார்த்து உள்ளம்அரிப்பெடுத்ததாம், உடல் தினவெடுத்ததாம். இதெல்லாம் நடந்ததுவிட்டுசித்தருக்கு. பெரியாழ்வாரை விட்டு சித்தன் என்றுதான்மக்கள் அழைத்தனர். சதா சர்வ காலமும் விஷ்ணுவையே அவர்நினைத்துக் கொண்டிருந்ததால் அவருக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது.அப்படிப்பட்டவரை சபல சித்தராக வர்ணிப்பது மன்னிக்க முடியாதகுற்றம். வைணவ மரபில் ஒன்று சொல்வார்கள். இறைவன்தனக்கு யாரேனும் அபசாரம் செய்தாலும் பொருட்படுத்த மாட்டான்.ஆனால் தனது பக்தனுக்கு அபசாரம் செய்தால் பொறுக்கமாட்டான். தெய்வத்தாலும் பொறுக்க முடியாத குற்றத்தைசெல்வராஜ் செய்துள்ளார்.
16.  பூமாலை தொடுத்து, அதை இறைவனுக்கு சாற்றி அழகு பார்த்தவிட்டுசித்தர் சாதாரண மானுடப் பெண்ணின் அழகைப் பார்த்துமனம் தடுமாறி இருக்கவே முடியாது. அப்படி தடுமாறிஇருந்தாலும், அதை மறைக்கும் பழக்கம் வைணவத்தில்இருந்ததில்லை. உள்ளதை உள்ளபடியே எழுதி வைத்துள்ளார்கள்.உதாரணமாக தொண்டரடிப்பொடி ஆழ்வார், பூர்வத்தில் ஒருவேசியிடம் மயங்கியிருந்ததை மறைக்கவில்லை. திருமங்கைஆழ்வார் வழிப்பறி செய்ததை மறைக்கவில்லை. பெரியாழ்வார்வாழ்விலும் அப்படிச் சம்பவங்கள் நடந்திருந்தால் அதைமறைத்திருக்க மாட்டார்கள். மேலும் மனம், மொழி, மெய்ஆகியவற்றில் எந்த விஷ்ணு பக்தனும் பிறழ்ந்ததில்லை என்றநிலை இருந்தது. இந்தக் கதையை எழுதுவதற்கு முன், ஒரு சிறுஆராய்ச்சி முயற்சியாக, ஆழ்வார்கள் சரித்திரத்தை செல்வராஜ்அவர்கள் படித்திருந்தால், தெரிந்திருக்கும். ஸ்ரீ வைஷ்ணவர்கள்தவறு செய்தவர்களாக இருந்தால் தன்னைப் பாம்பு தீண்டிக்கொல்க என்று சொல்லி பாம்பு இருந்த குடத்தில் கையை விட்டார்குல சேகர ஆழ்வார். பாம்பு அவரைத் தீண்டவில்லை என்றசம்பவத்தின் மூலம், விஷ்ணு பக்தர்கள் தவறிழைக்க மாட்டவேமாட்டர்கள் என்ற நம்பிக்கை அன்றைக்கு எந்த அளவுக்குஇருந்த்து என்பது தெரிய வந்திருக்கும். பெருமாள்திருமேனியிலேயே எண்ணத்தைச் செலுத்தும் ஆழ்வார்போன்றவர்களுக்கு, எந்தப் பெண்ணின் புற அழகும்சலனப்படுத்தாது. இன்னும் சொல்லப்போனால் புற அழகையேஉருமாற்றக் கூடிய சக்தி படைத்தவர்கள் ஆழ்வார்கள் என்பதைத்திருமழிசை ஆழ்வார் வரலாற்றின் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம். ஒரு கிழவிக்கு இளமையைக் கொடுத்தவர் இந்த ஆழ்வார். அந்த கிழவி செய்து வந்த தொண்டில் மனம் குளிர்ந்துஅவள் கேட்டுக் கொண்டதன் படி அவளுக்கு இளமை திரும்புமாறுவரம் கொடுத்தார் திருமழிசை ஆழ்வார். அவள் அடைந்தஇளமையும், அழகும் எப்படிப்பட்டதென்றால், அந்த நாட்டுப்பல்லவ அரசன் அவள் அழகில் மயங்கி அவளைத் திருமணம்செய்து கொள்கிறான். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஆழ்வார்களுள்ஒருவரான பெரியாழ்வார், சபலத்துக்கு இடம் கொடுத்தவராகச்சித்தரித்து, எழுதியவரது வக்கிர புத்தியைக் காட்டுகிறது.
17.   அடுத்த வக்கிரம், பெரியாழ்வாருக்குப் பொருள் மேல்ஆசையாம். அதற்காகத்தான் மதுரைக்குச் சென்று விவாதத்தில்கலந்து கொண்டாராம். ஆழ்வாரது பெருஞ்செல்வம் அகாரம்தான்.எல்லாவற்றுக்கும் ஆரம்பமாகவும், மூலமாகவும் இருக்கின்ற ‘அ’என்னும் எட்டெழுத்துக்களால் அறியப்படுகின்ற அகார வாக்யனானநாராயணனையே தனமாகக் கொண்ட அவர், அந்த அகாரத்தையேவிவரித்து விவாதத்தில் வென்றார். அந்த விவாதத்திற்குத்தாமாகவே அவர் செல்லவில்லை. அவர் வணங்கி வந்தவடபத்ரசாயி பெருமான் கனவில் தோன்றி அவரைச் செல்லுமாறுபணிக்கவே அவரும் சென்றார். சென்று வென்ற தனத்தையும்வடபத்ர சாயிக்கே உரியது என்று சமர்ப்பித்தார்.”வடபெருங்கோயிலுடையான் திரு முன்பே வைத்து ‘தேவரீராலேஉண்டான தனம் தேவரீருக்கே’ என்று தெண்டன் சமர்ப்பித்தார்”என்று ஆழ்வார்கள் சரித்திரத்தைக் கூறும் குரு பரம்பரைப்பிரபாவம் என்னும் நூல் கூறுகிறது. அந்த தனத்தைக்கொண்டுதான் அவர் கோவிலை விரிவாகக் கட்டியிருக்க வேண்டும்என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்டவரை பணத்துக்குஆசைப்பட்டு விவாதத்துக்குச் சென்றார் என்று வாய் கூசாமல்சொல்கிறார் செல்வராஜ்!
18.  எல்லாவற்றையும் தியாகம் செய்தால்தான் இறைவனுக்குஅருகாமையில் செல்ல முடியும் என்பது வைணவக் கருத்து.சகல தர்மங்களையும் தியாகம் செய்து விட்டு வாஉன்னைப்பீடிக்கும் எல்லா பாபங்ளிலிருந்தும் நான் காப்பாற்றி உனக்குமோட்சம் தருகிறேன் என்று தேர்த் தட்டில் நின்று அர்ஜுன்னுக்குகிருஷ்ணன் சொன்ன வாக்கைத் தலையாய வாக்காகப் பின்பற்றும்வைணவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவ்வாறு இருக்க, 1000வருடங்களுக்கு முன் விட்டுசித்தராக இருந்த ஆழ்வார் பணத்துக்குஆசைப்பட்டா விவாதத்துக்குச் சென்றிருப்பார்? ஒன்றுபாக்கியில்லாமல் எல்லா வித்த்திலும் character assassinationசெய்திருக்கிறார் செல்வராஜ்.
19.  பாண்டிய அரசன் ஸ்ரீ வல்லபன் மிகவும் பராக்கிரமம்கொண்டவன். இவன் குண்ணூர், சிங்களம், விழிஞம் போன்றஇடங்களில் போரிட்டு வென்றவன். இவன் பெற்ற ஈழத்துவெற்றியை மகாவம்சம் குறிப்பிடுகிறது. இவனது வெற்றிகளைப்பறை சாற்றும் சின்னமனூர்ச் செப்பேடுகள் “வாடாத வாகை சூடிக்கோடாத செங்கோல் நடப்ப” என்று புகழ்கின்றன. வளையாதசெங்கோலை உடைய மன்னன் பிரம்மதேயமான ஊரில் காமக்கண்ணுடனா செல்வான்? இந்த மன்னன் பல போர்களையும்வென்றவன் என்பதைப் பெரியாழ்வாரும் தன் பாடலில்குறித்துள்ளார். “குறுகாத மன்னரைக் கூடி கலக்கி வெங்கானிடைச்சிறுகால் நெறியே போக்குவிக்கும் செல்வன்” என்று கூறுயுள்ளதுஇம்மன்னையே. அப்படிப்பட்ட வெற்றிகளைப் பெற்ற மன்னன்பெற வேண்டியது ஒன்று இருந்தது. அது மறுமைக்குத்தேவையான செல்வம். ஒருமுறை மதுரை நகரில் இரவுசோதனைச் சென்ற போது திண்ணை ஒன்றில் படுத்திருந்த ஒருபார்ப்பனனைக் கண்டு ‘நீ யார்?’ என்று வினவ, அவன் தான்கங்கையாடி வந்த்தாகச் சொன்னான். அவன் கற்றுக் கொண்ட வந்தவிஷயத்தைப் பற்றி மன்னன் வினவ, அவன் ‘மழைக்காலத்துக்குவேண்டியதை மற்ற எட்டு மாதங்களிலும்இரவுக்குவேண்டியதைப் பகலிலும்முதுமைக்கு வேண்டியதைஇளமையிலும்மறுமைக்கு வேண்டியதை இம்மையிலும் தேடுக“என்ற பொருள் படும் ஸ்லோகத்தைச் சொன்னான்.  அரசனிடம்எல்லாம் இருந்தது. ஆனால் மறுமைக்கு என்ன வேண்டும் அதைஇம்மையில் எவ்வாறு தேட வேண்டும் என்பது தெரியவில்லை.அதைப் பற்றித் தனது புரோகிதரான செல்வ நம்பியிடம் வினவ,அவர் வித்வான்களை அழைத்து, அவர்களிடமிருந்து தெரிந்துகொள்ளலாம் என்றார். அப்படி வந்தவர்தான் பெரியாழ்வார். அவர்பரத்தத்துவத்தை நிலைநாட்ட, அவரால் ஈர்க்கப்பட்ட அரசன் ஸ்ரீவல்லபன், அவருடைய சிஷ்யனானான் என்று ஆதார நூல்கள்கூறுகின்றன. அப்படிப்பட்டவன் அவரது மகளான ஆண்டாளைப்பார்த்துக் காமுறுகிறானாம். அவரையே கைது செய்கிறானாம்(அவனது சிப்பாய்கள் ஆழ்வாரைப் பிடித்து கோவில் சன்னிதியிலேநிறுத்தினராம்). இதெல்லாம் என்ன கற்பனையோ! இந்து மதப்பெரியவர்களைக் கேவலப்படுத்த வேண்டும் என்றுநினைப்பவர்களால்தான் இப்படியெல்லாம் எழுத முடியும்.
பெருமாளுக்குக் கண்ணடி படக்கூடாதே என்று பல்லாண்டுபாடியவர் பெரியாழ்வார். அவர் பரத்தத்துவம் நிர்ணயம்செய்தபின், பட்டர்பிரான் என்ற பட்டத்தைப் பெற்று, அரசனதுபட்டத்து யானையின் மீது ஊர்வலம் வரும் போது, மகன்பெரும் பெருமையைக் காண, தாய் தந்தையர் நேரே வந்துபார்ப்பது போல, நாராயணனே, பிராட்டியுடன் கருடன் மீதுஆரோஹணித்து அவருக்குக் காட்சி தர, பெரியாழ்வாருக்குக்கவலை வந்து விடுகிறது. அரக்கஅசுரர்கள் வாழும் பூமியாகஇருக்கும் கலி காலம் இதுஅந்தக் கலியால் இருள்சூழ்ந்திருக்கும் நேரத்தில் ஒளிமயமாக இந்தத் தெய்வம் காட்சிதருகிறானேஇவனுக்குக் கண் பட்டுவிடாதோஅதனால் தீங்குவந்து விடாதோ என்று கவலையுற்று, இறைவன் பல்லாண்டுவாழவேண்டும் என்று வாழ்த்துகிறார். திருப்பல்லாண்டுபாடுகிறார். அப்படிப்பட்ட அவருக்கு இந்தக் கலியுகசெல்வராஜால் சொல்லடி கிடைக்கிறது. ‘பின்னைகொல்,நிலமாமகள் கொல், திருமகள்கொல்  பிறந்திட்டாள்” – இவள்நப்பின்னையோ, பூதேவியோ, ஸ்ரீதேவியோ என்று பெரியாழ்வார்ஆசாரியப்பட்ட ஆண்டாளுக்கு, செல்வராஜ் உபயத்தில் புதுஅரிதாரம் கிடைத்திருக்கிறது.
பெருமாளுக்குக் கண்ணடி படக்கூடாது என்று பதறிய ஆழ்வார்மீது சொல்லடி விழுகிறதே இதுதான் கலியின் இருள் என்பதா?கலி இருளில் ஞானச் சுடர் விள்க்கேற்றப் பாடினாரே அதற்குஇதுதான் கைமாறா? ஐயைந்துமைந்தும் அறியாத மானிடரைவையம் சுமப்பதும் வம்பு என்று 30 திருப்பாவைபாசுரங்களையும் அறியாதவர்களை இந்தப் பூமி சுமப்பதால்வம்புதான் நேரிடும் என்றார்களே அதுதான் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறதா?. செல்வராஜ் போன்றவர்களை இன்னும்சுமந்து கொண்டிருக்கிறோமே என்று இந்த வையம் அழுதுகொண்டுதானே இருக்கும்?
நோன்பு என்ற தலைப்பிட்டு, அந்தத் தலைப்பை எப்படியாவதுகதைக்குள் நுழைக்க முயன்ற செல்வராஜ், கடைசி வரியில்அதைக் கொண்டு வருகிறார். ‘அந்த மூன்று பேர்கள் நோன்புஆரம்பமாயிற்று என்கிறார். அந்த மூன்று பேர், பெரியாழ்வார்,ஆண்டாள், ஸ்ரீ வல்லபன் என்பது செல்வராஜனது நினைப்பு.உண்மையில் இவரைப் போன்றவர்களைப் பெற்றதனால், இந்தபூமித்தாய்தான் நோன்பிருக்க வேண்டும் – இனியும்செல்வராஜைப் போன்றவர்கள் பிறக்கக்கூடாது,இப்படிப்பட்டவர்களை தான் சுமக்கக்கூடாது என்று அவள்எப்படி பரிதவித்துக் கொண்டிருப்பாள்? ஆண்டாளாகப் பிறந்துஅன்று நமக்கு ஞானச்சுடர் ஊட்டின பூமாதேவி, இன்று அந்தச்சுடரை அணைக்கப்பார்க்கும் எல்லாப் பதர்களிடமிருந்தும்நம்மைக் காக்க நோன்பிருக்கத்தான் வேண்டும்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s